சின்னத்திரையிலிருந்து, வெள்ளித்திரைக்கு நுழைந்த சிவகார்த்திகேயன் மிக குறுகிய காலத்திலேயே அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இவர் நடிப்பது மட்டுமின்றி படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 5 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஒரு படத்திற்கு 15 கோடி ரூபாய் என மொத்தம் 75 கோடி ரூபாய்க்குசம்பளம் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் கடன் சுமை காரணமாகவே தொடர்ச்சியாகப் 5 படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த 5 படங்களை இயக்க போகும் இயக்குநர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.