குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அஸ்வின். இவர் கதாநாயகனாக நடித்துள்ள 'என்ன சொல்ல போகிறாய்' திரைப்படத்தை ஹரிஹரன் இயக்கியுள்ளார். ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் படத்தைத் தயாரித்துள்ளது.
இப்படம் டிசம்பர் மாதம் வெளியாவதாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து, புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டது. அதன்படி சமீபத்தில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
அதில், "கதை பிடிக்காவிட்டால் தூங்கிவிடுவேன், இதுவரை 40 இயக்குநர்களின் படங்களைக் கேட்டுத் தூங்கி இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். இவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தான் பேசியதற்கு அஸ்வின் மன்னிப்பு கேட்டும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அவரைக் கடுமையாகச் சாடிவருகின்றனர்.
![அஸ்வின் வெளியிட்ட பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/dfsa_1612newsroom_1639629685_84.jpg)
இந்நிலையில் அஸ்வின் பேச்சு சர்ச்சையான நிலையில் 'என்ன சொல்லப் போகிறாய்' படத்தின் வெளியீட்டு தேதி 2022ஆம் ஆண்டு தள்ளிப்போனது. மேலும் காதலர் தினத்தன்று படம் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. இதை அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'சூப்பர் ஸ்டாருக்கு அப்புறம் சிம்புதான்...'; நடிகர் அஸ்வின் உருக்கம்!