நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள திரைப்படம் டாக்டர். யோகி பாபு, வினய் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
கேஜேஆர் ஸ்டூடியோஸுடன், சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. பல்வேறு கட்ட ரிலீஸ் தேதி மாறுதல்களுக்குப் பிறகு ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கரோனா இரண்டாவது அலை காரணமாக, திரையரங்குகள் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்னணி ஓடிடி நிறுவனத்திடம், படத்தை ரிலீஸ் செய்வது குறித்து ’டாக்டர்’ படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.