தமிழ் சினிமாவில் 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'விசாரணை', 'வடசென்னை' படங்களின் மூலம் வெற்றி இயக்குநராக வலம்வருபவர் வெற்றிமாறன். தற்போது சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கிவருகிறார். இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தை இயக்குகிறார்.
மேலும் 'வடசென்னை 2' படத்திற்கான வேலையிலும் வெற்றிமாறன் ஈடுபட்டுவருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில், கமல் ஹாசனை வைத்து புதிய படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல் ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்துவருகிறார். மேலும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார். இவை எல்லாம் முடிந்த பின்னரே இப்படத்தின் வேலைகள் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. அதோபோல பிக்பாஸில் அக்ஷரா ரெட்டி, நடிகை பவானி ரெட்டி, தொகுப்பாளினி பிரியங்கா, ஜாக்குலின், சுனிதா , சந்தோஷ் பிரதாப் , கோபிநாத் ரவி, மிலா உள்ளிட்டோர்களின் பெயர்கள் உள்ளது
வெற்றிமாறன் ஒரு புதினம் குறித்து கமலிடம் பேசியுள்ளதாகவும் இது ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையாக மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அசுரன் படத்தில் நான் நிறைவாக பணியாற்றவில்லை - வெற்றிமாறன்