ETV Bharat / sitara

உலக நாயகன் படத்தை இயக்கும் வெற்றிமாறன்? - vetrimaran pairs with kamal hassan

வெற்றிமாறன் இயக்கும் திரைப்படத்தில் கமல் ஹாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்
author img

By

Published : Jun 30, 2021, 12:10 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், வெற்றி இயக்குநராகவும் வலம்வருபவர் வெற்றிமாறன். இவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

இவர் தற்போது சூரி, விஜய் சேதுபதியை வைத்து 'விடுதலை' என்ற படத்தை இயக்கிவருகிறார். அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தையும் இயக்க உள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இருதரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாததால், இச்செய்தி எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியாமல் ரசிகர்கள் குழம்பிவருகின்றனர்.

கமல் ஹாசன் தற்போது 'விக்ரம்', 'இந்தியன் 2' ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இருவருமே தற்போது பிஸியாக இருப்பதால் தற்போதைய படங்களை முடித்துவிட்டு இந்தப் புதிய படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'சாணிக் காயிதம்' அப்டேட்டை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.