நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கிவரும் 'பீஸ்ட்' படத்தில் நடித்துவருகிறார். சென்னை, புனே, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது.
படப்பிடிப்பு தொடங்கி 100 நாள்கள் நிறைவடைந்ததை இயக்குநர் நெல்சன் சமீபத்தில் அறிவித்து படக்குழுவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.
இதனையடுத்து விஜய்யின் 66 ஆவது படத்தை 'தோழா', 'மஹரிஷி' உள்ளிட்ட படங்களை இயக்கிய முன்னணி தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவுள்ளதாகச் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்தப்படத்திற்குப் பிறகு விஜய்யின் 67ஆவது படத்தை இயக்குநர் வெற்றிமாறன் மகிழ் திருமேன் அல்லது லோகேஷ் கனகராஜ் ஆகியோரில் ஒருவர் இயக்கக்கூடும் என சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
இந்நிலையில் தளபதி 68 ஆவது படத்தை மீண்டும் அட்லி இயக்கவுள்ளதாவும் படத்தின் ஷுட்டிங் 2023 ஆம் ஆண்டு தொடங்ககூடும் எனவும் சமூக வலைதளங்களில் புதுத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய மூன்று படங்களை அட்லி இயக்கியுள்ளார்.
இந்த செய்தியை கேட்ட பலரும் இன்னது மறுபடியும் அட்லியுடன் படமா என அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனென்றால் 'பிகில்' படத்தில் வரும் சில காட்சிகள், 'The Miracle season' என்ற படத்திலிருந்து திருடப்பட்டதாக படம் வெளியான சமயத்தில் கூறப்பட்டது.
அதனால் விஜய் இனிமேல் அட்லி படத்தில் நடிக்காமல் இருப்பது அவரின் திரையுலக வாழ்க்கைக்கு நல்லது என ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இயக்குநர் அட்லி தொடர்ச்சியாக விஜய்யை வைத்து மட்டும் மூன்று படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மைக் டைசனுடன் இருந்த நாட்கள்....'; மனம் திறந்த லைகர் படக்குழு!