சென்னை: இயக்குநர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளியன்று வெளியாகிறது.
'அண்ணாத்த' படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீசர், ட்ரெய்லர் என அணைத்தும் படம் குறித்த எதிர்பார்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் ரஜினி வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குநரும் ரஜினியின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் உருவாக்கியுள்ள ஹூட் செயலி வாயிலாக இயக்குநர் சிவாவிற்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
-
To the most adorable and amazing person, @directorsiva sir 💙💙💙 welcome to hoote sir !! https://t.co/nU4MPqYC4X
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">To the most adorable and amazing person, @directorsiva sir 💙💙💙 welcome to hoote sir !! https://t.co/nU4MPqYC4X
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 30, 2021To the most adorable and amazing person, @directorsiva sir 💙💙💙 welcome to hoote sir !! https://t.co/nU4MPqYC4X
— soundarya rajnikanth (@soundaryaarajni) October 30, 2021
அதில், ஹூட் செயலியில் இணைந்ததற்கு வாழ்த்துக்கள். நீங்கள் 'அண்ணாத்த' திரைப்படத்தில் என்ன மேஜிக் செய்துள்ளீர்கள் என்று மக்கள் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் நான் பார்த்து விட்டேன்.
படம் பார்த்துவிட்டு நான் வெளியே வந்து உங்கள் கையை பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னேன். ரஜினியின் ரசிகையாகவும், அவரது மகளாகவும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் அப்பாவும் இணைந்து மீண்டும் ஒரு படம் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லதா ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குகிறார்? - செளந்தர்யா ரஜினிகாந்த் பிரார்த்தனை