இயக்குநர் - நடிகர் சசிகுமாரின் 'சுந்தரபாண்டியன்' திரைப்படத்தில் வில்லனாக நடிகர் செளந்தராஜா அறிமுகமானார். இதன் பின் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ஜிகர்தண்டா', 'தெறி', 'தர்மதுரை', 'கடைக்குட்டி சிங்கம்', 'சில்லுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தார்.
![சௌந்தரராஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/actor-soundararaja-51558538095940-57_2205email_1558538107_179.jpg)
'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது', 'ஒரு கனவு போல' ஆகிய படங்களில் நாயகனாக செளந்தராஜா அவதாரம் எடுத்தார். இந்நிலையில் ஓம் சினி வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக அறிமுக இயக்குநர் சாய் கிருஷ்ணா எழுதி இயக்கும் 'காபி' திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக செளந்தராஜா நடித்து வருகிறார். இதில் வரும் சண்டை காட்சிகளுக்கு சிறப்பு பயிற்சி எடுத்தும் நடிக்கிறார்.
![சௌந்தரராஜா](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/actor-soundararaja-21558538095925-41_2205email_1558538107_332.jpg)
மேலும் சௌந்தரராஜா அட்லி இயக்கும் 'தளபதி 63' படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.