நடிகர்கள் அக்ஷய் குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் 'சூர்யவன்ஷி'. ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படம் இம்மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மிகப்பெரிய பொருட்செலவில் வெளியான இதை தர்மா புரொடெக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரில்லர் காப் ஸ்டோரியாக உருவாகியுள்ள இதில் நாயகியாக கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கார் ரேஸ் என்று விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாமல் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்நிலையில் சூர்யவன்ஷி திரைப்படம் வெளியான ஐந்து நாளில், 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்திருக்கிறது. சூர்யவன்ஷி வெளியான முதல்நாளிலேயே கிட்டத்தட்ட ரூ. 26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை அக்ஷய் குமார் படத்துக்கு இல்லாத முதல்நாள் வசூல் இப்படம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்றுக்குப் பின் வெளியான இந்திப் படங்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை 'சூரியவன்ஷி' படம் படைத்திருக்கிறது.
இதையும் படிங்க: சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படப்பிடிப்பு நிறைவு!