இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா தனது 40ஆவது படத்தில் நடித்துவருகிறார். சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூர்யா, பிரியங்கா மோகன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் இப்படத்திற்கு ‘எதற்கும் துணிந்தவன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடிகர் சூரியின் கதாபாத்திரத்தின் பெயர் 'அவனி சூளாமணி' என்று தெரியவந்துள்ளது. இதனைப் படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் வெளியிட்டுள்ளார்.
-
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அவனி சூளாமணி 💐🤗 @sooriofficial #HappyBirthdaySoori
— Pandiraj (@pandiraj_dir) August 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
#ET#EtharkumThunindhavan @Suriya_offl @sunpictures @RathnaveluDop @priyankaamohan pic.twitter.com/nzF7613r4p
">இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அவனி சூளாமணி 💐🤗 @sooriofficial #HappyBirthdaySoori
— Pandiraj (@pandiraj_dir) August 27, 2021
#ET#EtharkumThunindhavan @Suriya_offl @sunpictures @RathnaveluDop @priyankaamohan pic.twitter.com/nzF7613r4pஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் அவனி சூளாமணி 💐🤗 @sooriofficial #HappyBirthdaySoori
— Pandiraj (@pandiraj_dir) August 27, 2021
#ET#EtharkumThunindhavan @Suriya_offl @sunpictures @RathnaveluDop @priyankaamohan pic.twitter.com/nzF7613r4p
நேற்று (ஆகஸ்ட் 27) சூரியின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பைப் படத்தின் இயக்குநர் வெளியிட்டார். இதனையொட்டி படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்புகைப்படங்களை பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா, சத்யராஜ், பாண்டிராஜ், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.
இதையும் படிங்க: கதையின் நாயகனாக காத்திருந்தேன் - சூரி