நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ’சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாக வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும் வரவேற்புகளும் வந்த வண்ணம் இருந்தன. மேலும், இணையதளத்தில் இந்தப் படம் குறைவான அளவிற்கே வியாபாரம் செய்யப்பட்டதாகவும், திரையரங்கில் வெளியிட்டால் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் என்றும் செய்திகள் உலா வந்தன.
இந்நிலையில், தற்போது சூரரைப் போற்று படம் ரிலீசுக்கு முன்பே 100 கோடிக்கும் மேல் ப்ரீ பிசினஸ் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனையடுத்து, சூர்யாவின் ரசிகர்கள் இதனைக் கொண்டாடும்விதமாக #SooraraiPottruHits100crPB என்ற ஹாஷ்டேக் உருவாக்கி இணையதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரிலீசுக்கு முன்பே 100 க்ரோர் கிளப்பில் இணைந்த 'சூரரைப்போற்று' - சூரரைப்போற்று வெளியாகும் தேதி
சென்னை : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே 100 கோடி ரூபாய்க்கு மேல் ’ப்ரீ பிசினஸ்’ (pre business) செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.