செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனைத்தொடர்ந்து '7ஜி ரெயின்போ காலனி', 'புதுப்பேட்டை' படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும், இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து விவகாரத்து பெற்று தனியாக வாழ்ந்துவருகிறார். விவகாரத்து பெற்றதால் அவரது சினிமா வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் ஒரு சில படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தமிழில் பல படங்களில் நடித்து வந்தாலும் தனக்கான தனிபிம்பம் இல்லாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த தனிமை திரைப்படம் பெரும் ஏமாற்றத்தை தந்தது. மேலும், அயோக்யா, தடம் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் சென்ற சோனியா அகர்வால் அத்திவரதரை தரிசித்து ஆசி பெற்றார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இருந்தாலும், ரசிகர்களின் மனம் நோகாமல் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.
-
Our Star @soniya_agg mam at Athi Varadar Darshan @ Kanchipuram Varadaraja Perumal Temple. pic.twitter.com/JVDYk9nHvm
— Priya - PRO (@PRO_Priya) July 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Our Star @soniya_agg mam at Athi Varadar Darshan @ Kanchipuram Varadaraja Perumal Temple. pic.twitter.com/JVDYk9nHvm
— Priya - PRO (@PRO_Priya) July 28, 2019Our Star @soniya_agg mam at Athi Varadar Darshan @ Kanchipuram Varadaraja Perumal Temple. pic.twitter.com/JVDYk9nHvm
— Priya - PRO (@PRO_Priya) July 28, 2019
தற்போது, ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.