ETV Bharat / sitara

'இப்படியும் படம் எடுக்கலாம்னு இவ்வளவு நாள் தெரியாம போச்சே' - எஸ்.ஜே.சூர்யா - மான்ஸ்டர் திரைப்படம்

'மான்ஸ்டர்' திரைப்படம் தனக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்திருப்பதாக நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

மான்ஸ்டர் பட சக்ஸஸ் மீட் நிகழ்வில் எஸ்ஜே சூர்யா பேச்சு
author img

By

Published : May 20, 2019, 10:14 PM IST

எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான மான்ஸ்டர் திரைப்படத்தின் சக்சஸ் மீட் சென்னை பிரசாத் லேப்பில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில்,

'வாலி' படத்தில் இயக்குநராக ஆரம்பித்து இன்று 'மான்ஸ்டர்' படம் வரை வந்துள்ளேன். எனக்கு கனவுகளும், ஆசைகளும் அதிகம். ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்ணி கடந்த 25 வருடங்கள் ஓடிவிட்டன. என் படத்துக்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது. அந்த வகையில் 'மான்ஸ்டர்' படம் எனக்கு ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். இப்படியும் படம் எடுக்கலாம் என்பதை தவறவிட்டு விட்டேன் இவ்வளவு நாள்.

'மான்ஸ்டர்' படம் திரையிடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. ஒரு குத்து பாடல் இல்லை, கிளாமர் இல்லை என்றாலும் படத்துக்கு கூட்டம் வருவது மகிழ்வாக உள்ளது. இது புதிய நம்பிக்கையை கொடுக்கிறது. திறமை வாய்ந்த இயக்குநரிடம் நம்மை ஒப்படைத்துவிட்டால் போதும், நல்ல நடிகனாக ஜொலிக்க முடியும். நல்ல கதைகள் அமையவில்லை என்றால் என்னிடம் உள்ள கதைகளைக் கொண்டு படம் எடுப்பேன் என்று தெரிவித்தார்.

மான்ஸ்டர் பட சக்ஸஸ் மீட் நிகழ்வில் எஸ்ஜே சூர்யா பேச்சு

அமிதாப் பச்சன் உடன் நடிக்கும் அனுபவம் பற்றி பகிர்ந்துகொண்ட எஸ்.ஜே.சூர்யா, நடிக்கும் அனைத்து காட்சிகளையும் முதல் டேக்கிலேயே அமிதாப் பச்சன் ஓகே பண்ணிவிடுவார் என்று கூறினார். மேலும் தன் நடிப்பில் வெளிவராமல் உள்ள அனைத்து படங்களும் நல்ல படங்கள்தான். பொந்தில் மாட்டியுள்ள அவற்றை வெளியில் எடுக்கவே இந்த எலி வந்திருக்கிறது. விரைவில் வெளியே கொண்டு வந்து விடும் என நம்புகிறேன்.

நடிகர் அஜித், விஜய் ஆகிய இருவரிடமும் பணியாற்றியுள்ள நீங்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு, அவர்கள் இருவரும் முடிவு ஒன்றை எடுத்துவிட்டால், அதை செயலாக செய்து முடிப்பதுடன், வெற்றியும் பெறுவார்கள். அவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்தவன் என்பதால் இதைக் கூறுகிறேன்.

இறுதியாக, தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிப் படங்களில் நடித்த பின் திருமணம் பற்றி யோசிக்கலாம் என்று கூறினார்.

அரசியலில் அஜித் விஜய்  இருவரும் ஒரு  முடிவு எடுத்து  விட்டால் அதில் வெற்றி பெறுவார்கள் - ஜே சூர்யா பேச்சு

மான்ஸ்டர் திரைப்படத்தின்  சக்சஸ் மீட் இன்று சென்னை பிரசாத் லேபில்  நடைபெற்றது  இதில் நடிகர் எஸ் ஜே சூர்யா கலந்து கொண்டு பேசினார் .

வாலியில் இயக்குனராக ஆரம்பித்து இன்று மான்ஸ்டர் வரை வந்துள்ளேன். நல்லதை எப்போதும் புகழை தர மறந்ததில்லை. என்னுடைய கனவுகளும் ஆசைகளும் அதிகம். ஒரு நடிகனாக சாதிக்க வேண்டும் என எண்ணி கடந்த 25வருடங்கள் ஓடிவிட்டன , 

பாலை வனத்தில் ஒட்டகம்  வயிறு நிறைய தண்ணீர் நிரப்பிக் கொண்டு வாழ்வதைப் போல நான் கனவுகளை சுமந்து வாழ்ந்து வந்தேன் , முதல் முறையாக குடும்பங்களை இணைத்துள்ள மான்ஸ்டர் படம் எனக்கு ஒரு புதிய பயணத்தின் தொடக்கம். என் படத்திற்கு முதல்முறையாக இவ்வளவு குடும்பங்கள் வந்துள்ளது. இப்படியும் படம் எடுக்கலாம் என்பதை  தவறவிட்டு விட்டேன் இவ்வளவு நாள் , ஒரு நடிகனாக வேண்டும் என்ற கனவு இப்போது 20 சதவிகிதம் நனவாகியிருக்கிறது இனி இந்தி  தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கவேண்டும் வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

இந்த பயணத்திற்கு பிள்ளையாரின் வாகனமாக எலியின் மூலம் நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. மான்ஸ்டர் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளின் எண்ணிக்கை  தற்போது அதிகரித்துள்ளது. ஒரு குத்து பாடல் இல்லை கிளாமர் இல்லை ஆனால் கூட்டம் வருகிறது மகிழ்வாக உள்ளது பிறகு புது பிக்கையை கொடுக்கிறது,

திறமை வாய்ந்த இயக்குனரிடம் நம்மை ஒப்படைத்துவிட்டால் போதும் நல்ல நடிகனாக ஜொலிக்க முடியும் 
இதற்கு மேல் தொடர்ந்து நடிகனாக உழைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நான் விருப்படும் நடிப்பு மூலம் எனக்கு மதிப்பும் மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன். நல்ல கதை வரவில்லை என்றால் என்னிடம் கதை உள்ளது அதை படமாக எடுப்பேன்.

இதில் அமிதாப் பச்சன் உடன் நடிக்கும் அனுபவம் குறித்த கேள்விக்கு

அமிதாப் பச்சன் உடன் நடித்த அனுபவம் என்பது. அனைத்து காட்சிகளிலுமே முதல் டேக் ஓகே பண்ணிவிடுவார்.

அதிக நல்ல படங்களில் நடிக்கிறீர்கள் ஆனால்  வெளிவரவில்லையே என்ற கேள்விக்கு

நிறையபடங்கள் உள்ளன இவையெல்லாம் ஒரு பொந்தில் மாற்றிக்கொண்டுள்ளது அதை வெளியில் எடுக்க இந்த எலி வந்து வெளியே கொண்டு வந்து விடும் என நினைத்தேன் அது நடைபெறும்.

நடிகர் அஜித் விஜய் ஆகிய இருவரிடமும் பணியாற்றியுள்ள நீங்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்விக்கு

அஜித்,விஜய் இருவரும் முடிவு முடிவு எடுத்து விட்டால் அதை செயலாக செய்து  அதில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் அவர்களை பற்றி தனிப்பட்ட முறையில் தெரிந்தவன் என்பதால் கூறுகிறேன்.

திருமணம் குறித்த கேள்விக்கு

தமிழ் தெலுங்கு இந்தி என  அனைத்து மொழி படங்களில் நடித்த பின் திருமணம் பற்றி யோசிக்கலாம்.

வீடியோ மோஜோவில் அனுப்புகிறேன்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.