கப்பல், மேயாதமான் போன்ற படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் வைபவ். இவர் தற்போது இயக்குநர் சாச்சி இயக்கத்தில் சிக்சர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் வைபவ் உடன் ஜோடியாக பாலக் லால்வாணி நடித்துள்ளார். மேலும் சதீஷ், விஜய் டிவி புகழ் ராமர், ராதாரவி என பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
மாலைக்கண் நோயாளியாக வைபவ் நடிக்கும் இப்படம், காதல் காமெடி கலந்த ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.