ETV Bharat / sitara

கோவா இசைத் திருவிழாவில் தூள் கிளப்பும் 'டிரம்ஸ் சிவமணி'

கோவாவில் நடைபெறும் நிவான் ஹேண்ட்பான் மற்றும் உலக இசைத் திருவிழாவில் பிரபல இசைக்கலைஞர் சிவமணியின் சிறப்பு நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.

Sivamani
Sivamani
author img

By

Published : Feb 7, 2020, 2:58 PM IST

கோவா தலைநகர் பானஜியில் நடைபெறவுள்ள நிவான் ஹேண்ட்பான் மற்றும் உலக இசைத் திருவிழாவில் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞரும், இசையமைப்பாளருமான டிரம்ஸ் சிவமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.

மியூசிக்கரி நிறுவனம் நடத்தும் இந்த இசைத் திருவிழா இன்று முதல் வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சிவமணி தொடங்கி வைத்து சிறப்பிக்கிறார்.

மேலும், இந்த இசைத் திருவிழாவில், இசைக்கலைஞர்கள் கபேகாவோ, மார்ட்டின் டுபோயிஸ், கிரெக் எல்லிஸ், ஆர்ச்சர் மற்றும் டிரிப், ஆண்ட்ரி தான்சு, நாதுலால் சோலங்கி, ராகினி சங்கர், த்ரிதா சின்ஹா ​​மற்றும் இந்திய ஹேண்ட்பான் இசைக்கலைஞர்களான ஜெய் கோசர் மற்றும் சாமுவேல் மூர்த்தி ஆகியோரின் சிறப்பு நிகழ்ச்சிகளும் அரங்கேறவுள்ளன.

Sivamani
நிவான் ஹேண்ட்பான் மற்றும் உலக இசைத் திருவிழா

இதுகுறித்து பேசிய சிவமணி, 'நிவானின் இந்த முயற்சியில் நான் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். ஒரு டிரம்மர் மற்றும் ஒரு தாளவாத்தியராக இருப்பதால், இசை ஒருவரின் ஆன்மாவிலும் மனதிலும் எவ்வளவு இனிமையை, அமைதியை ஏற்படுத்தும் என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். இந்த மூன்று நாள் கொண்டாட்டத்தில் பார்வையாளர்கள் ஒரு புதிய அளவிலான மனநிறைவை அனுபவிப்பார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.

நிவான் இந்திய இசை, ஆன்மீகம் மற்றும் கலாசாரத்துடன் கலந்த ஹேண்ட்பான் இசை அம்சமாகும். அனைத்து இசை ஆர்வலர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் லாப நோக்கமின்றி இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்திய இசையில் ஹேண்ட்பானை நிலைநிறுத்துவதும், ஹேண்ட்பான் பிளேயர்களையும், இசை ஆர்வலர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவதுமே தங்களது நோக்கம் என்று நிவான் ஹேண்ட்பான் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தீபக் தக்கர் கூறினார்.

Drums Sivamani
டிரம்ஸ் சிவமணி

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் படங்களில் டிரம்ஸ் சிவமணி பணியாற்றியுள்ளார். இவர் அரிமாநம்பி, கணிதன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைத்துறையில் சிறந்து விளங்கும் இவரைப் பாராட்டி தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும், மத்திய அரசு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது.

இதையும் படிங்க...

'கர்ணன்' சிறந்த படைப்பாக அமையும் - நடிகர் லால்

Intro:Body:

Panaji, Feb 6 (IANS) Renowned percussionist Sivamani will hit the Goa beach for a performance at the Nivaan Handpan and World Music Festival, slated to be hosted by Musicurry from February 7-9.

The festival will be inaugurated by Sivamani, who would be the guest of honour.

It will be followed by performances by artistes such as Kabecao, Martin Dubois, Greg Ellis, Archer and Tripp, Andrey Tanzu, Nathulal Solanki, Ragini Shankar, Tritha Sinha and Indian handpan players such as Jai Gosar and Samuel Murthy.

"I am extremely glad to be a part of this initiative of Nivaan. I am looking forward to being a witness to the same. Being a drummer and a percussionist, I have experienced how soothing and calming the effect music has on one's soul and mind, and I am sure that with this three-day celebration, the audience will enjoy and get to experience a whole new level of contentment," said Sivamani.

Workshops will be conducted by the artistes too.

"Nivaan is multi-genre festival of handpan music blended with Indian music, spirituality and culture. This non-profit event for all music enthusiasts is crafted with the generous support of the Handpan India community. This event is dedicated to all the handpan players and its objective is to highlight this rare instrument that heals the inner core with its peaceful sound," said Dipak Thakkar, organiser of Nivaan Handpan and World Music Festival.

"Our aim is to position handpan in the Indian music scene and to bring the handpan players and music lovers under one roof. Apart from the performances, we also have workshops for those seeking to learn handpan techniques and explore the stirring aura of music," he added.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.