சுபாஷ்கரனின் லைக்கா மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. புரொடக்சன் ஆகியவை இணைந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளன.
இயக்குநர் அட்லியிடம் உதவியாளராக இருந்த, சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்திற்கு ’டான்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
இப்படத்தின் முதல் ஷெட்யூல் அடுத்த மாதம் கோயம்புத்தூரில் தொடங்கவுள்ளது. அங்கு கல்லூரி சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி?