சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'சீமராஜா', 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், துவண்டு கிடந்த சிவாவை தூக்கி நிறுத்தி அவருக்கு 'நம்ம வீட்டுப் பிள்ளை' என்னும் கமர்சியலான குடும்பப் பின்னணி கொண்ட கதையை கொடுத்து அவர் வாழ்வில் மீண்டும் ஒளியேற்றி வைத்த பெருமை இயக்குநர் பாண்டிராஜையே சேரும்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' சிவகார்த்திகேயனுக்கு கம் பேக் என்றே சொல்லலாம். இதைத்தொடர்ந்து 'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ படத்தை இயக்குவதாகத் தகவல் வெளியானது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான பிறகு, இது இந்தியில் வெளியான கிரிஷ் படத்தைப் போல் உள்ளது எனப் பலரும் கேலி செய்தனர். ஆனால் டீசரை பார்த்த பிறகு, படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. படத்தின் இசையமைப்பாளராக யுவன் இணைந்ததும் மக்களிடயே எதிர்பார்ப்பு எகிறியது.
இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சமயத்தில் படத்தின் பாதி டப்பிங், எடிட்டிங் வேலைகள் நிறைவடைந்ததால் வருகிற நவம்பர் 7ஆம் தேதி படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 20இல் படம் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'தளபதி 64' படத்தில் குட்டி ஜானு!