நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்கமுடியாத முன்னணி நடிகராக உள்ளார். சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து தனது கடின உழைப்பால், தற்போது இந்த நிலைக்கு வந்துள்ளார்.
இவருக்கு ஆர்த்தி என்ற மனைவியும் ஆராதனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், ஜூலை 12ஆம் தேதி இந்த தம்பதிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில், '18 வருடங்களுக்குப் பிறகு அப்பா என் விரல் பிடித்திருக்கிறார்' என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். தற்போது தனது மகனுக்கு 'குகன் தாஸ்' என்று பெயரிட்டுள்ளார்.
-
எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்🙏😊
Heartfelt thanks to each & everyone for showering ur wishes on our little boy..With all ur blessings & love we hv named our son “GUGAN DOSS" 🙏😊 pic.twitter.com/MKbpiWHe2D
">எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 3, 2021
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்🙏😊
Heartfelt thanks to each & everyone for showering ur wishes on our little boy..With all ur blessings & love we hv named our son “GUGAN DOSS" 🙏😊 pic.twitter.com/MKbpiWHe2Dஎங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும்
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 3, 2021
“குகன் தாஸ்” என பெயர்சூட்டியிருக்கிறோம்🙏😊
Heartfelt thanks to each & everyone for showering ur wishes on our little boy..With all ur blessings & love we hv named our son “GUGAN DOSS" 🙏😊 pic.twitter.com/MKbpiWHe2D
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்கள் அன்போடும் ஆசியோடும் 'குகன் தாஸ்' எனப் பெயர் சூட்டியிருக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
மகனுக்கு பெயர் சூட்டிய சிவகார்த்திகேயனுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். சிவகார்த்திகேயனின் தந்தையின் பெயர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!