ETV Bharat / sitara

புரட்சி தலைவரின் பாடல் வரியை சுட்டு தலைப்பாக வெளியிட்ட சிவகார்த்திகேயன்...!

author img

By

Published : Mar 18, 2019, 8:27 PM IST

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் இரண்டாவது புதிய படத்தின் தலைப்பை நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அறிவித்துள்ளார்.

1

நடிகர் சிவகார்த்திகேயன் ‘சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி படங்களை தயாரித்து வருகிறார். இவர் முதல் படமாக அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ‘கனா’ படத்தை தயாரித்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சின்னத்திரை நடிகரான ரியோ ராஜை கதாநாயனாக வைத்து ‘ஸ்மைல் சேட்டை’ யூ டியூப் சேனல் கார்த்திக் இயக்கும் புதிய படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ரியோ ராஜூக்கு ஜோடியாக ஷெரில் நடிக்கிறார். நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்டேர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஒலிஃபர் எடிட் செய்கிறார். படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படக்குழு ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ என்று தலைப்பு வைத்துள்ளதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் படக்குழு இப்படத்தின் தலைப்பை வித்தியாசமாக வெளியிட்டுள்ளனர். அதாவது விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் ட்ரெய்லர் பாணியில் அறிவித்துள்ளனர். அவர்கள் படத்தின் தலைப்பை சொன்ன விதமே ரசிகர்களை கவர்ந்துவிட்டது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகாரித்துள்ளது.

Here it is, the title announcement video

https://t.co/TJjHoVgQo3  #NenjamunduNermaiyunduOduRaja #NNOR💪💪💪

@Siva_Kartikeyan | @KalaiArasu_ | @karthikvenu10 | @rio_raj | @KanchwalaShirin | #RadhaRavi | @RjVigneshkanth | #NaSa | @SonyMusicSouth 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.