ETV Bharat / sitara

ஒரு தலைப்பிற்கு சண்டையிடும் இரு 'ஹீரோ'க்கள் - இரும்பு திரை

இரும்புத்திரை படத்தின் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்துக்கு 'ஹீரோ' என்று தலைப்பிட்டு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

poojai
author img

By

Published : Mar 13, 2019, 1:44 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சீமராஜா படத்தைத் தொடர்ந்து வரிசையாக பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'Mr.லோக்கல்' அடுத்து வெளியாகவுள்ளது. இந்நிலையில் 'இரும்புத்திரை' இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்க்கு 'ஹீரோ' என்று தலைப்பிட்டு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் இசையமைக்கவுள்ளார்.

இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி இந்த படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். 'ஹீரோ' படத்தின் பணிகளுக்கு இடையே, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கும் சிவகார்த்திகேயன் தேதிகளை ஒதுக்கியுள்ளது குறிப்பிடதக்கது.

இதே போல் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கும் ஹீரோ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22-ஆம் தேதி டெல்லியில் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் எடுக்கப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கு ஹீரோ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

Danny Cinema

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.