இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் 'நம்ம வீட்டு பிள்ளை'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். மேலும் இவர்களுடன் பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்டி நட்ராஜ், அர்ச்சனா, யோகி பாபு, சூரி, ஆர்கே சுரேஷ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துவருகிறது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
-
#NammaVeettuPillai First Single releasing on 23rd August at 11 am! #NVPFirstSingleAug23@Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer @aishu_dil @offBharathiraja @thondankani @sooriofficial @yogibabu_offl @ItsAnuEmmanuel @natty_nataraj @studio9_suresh @nirav_dop @AntonyLRuben pic.twitter.com/kEKbdV0ckg
— Sun Pictures (@sunpictures) August 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#NammaVeettuPillai First Single releasing on 23rd August at 11 am! #NVPFirstSingleAug23@Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer @aishu_dil @offBharathiraja @thondankani @sooriofficial @yogibabu_offl @ItsAnuEmmanuel @natty_nataraj @studio9_suresh @nirav_dop @AntonyLRuben pic.twitter.com/kEKbdV0ckg
— Sun Pictures (@sunpictures) August 19, 2019#NammaVeettuPillai First Single releasing on 23rd August at 11 am! #NVPFirstSingleAug23@Siva_Kartikeyan @Pandiraj_dir @Immancomposer @aishu_dil @offBharathiraja @thondankani @sooriofficial @yogibabu_offl @ItsAnuEmmanuel @natty_nataraj @studio9_suresh @nirav_dop @AntonyLRuben pic.twitter.com/kEKbdV0ckg
— Sun Pictures (@sunpictures) August 19, 2019
இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
டி. இமான் இசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏற்கனவே வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா' படங்களின் பாடல்களை போன்று 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தின் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.