இரும்புத்திரை படத்தின் இயக்குநர் மித்ரன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஹீரோ. இதில் கல்யாணி ப்ரியதர்ஷன், ஆக்க்ஷன் கிங் அர்ஜுன், இவனா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பள்ளி மாணவர்கள் கண்டுபிடிக்கும் கருவிகள், எப்படி சூறையாடப்படுகிறது என்பதே ஹீரோ படத்தின் கதையாகும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் ரசிகர்கர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில் தற்போது தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஹீரோ படம் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.
தெலுங்கில் சக்தி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கங்கா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இது அனைத்து மொழிக்கும் ஏற்ற படம் என்பதால், தெலுங்கில் இப்படம் வெற்றியடையும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் படம் குறித்து கூடுதல் அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'சின்மயி ஒரு விளம்பரப் பிரியர் - ராதாரவி