கரோனா பாதிப்பில் இருந்த மீண்டுவந்த சூர்யா, தனது பட வேலைகளில் ஈடுபடவுள்ளார். பாண்டிராஜ் இயத்தில் உருவாகிவரும் ‘சூர்யா 40’ படப்பிடிப்பு வேலைகளை முதலாவதாக முடிக்க திட்டமிட்டுள்ளார். அதை முடித்த கையோடு வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.
வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதியை வைத்து இயக்கிவரும் ‘விடுதலை’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். சூர்யா - வெற்றி இருவரும் தங்கள் தற்போதைய பட வேலைகளை முடித்துவிட்டு ‘வாடிவாசல்’ ப்ராஜெக்டை ஸ்டார்ட் செய்ய சரியாக இருக்கும்.
இது ஒருபுறமிருக்க, சூர்யாவின் 42ஆவது படம் ஹரி இயக்கும் ‘அருவா’ என கூறப்பட்டது. பின்னர் இந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது. தற்போது சூர்யாவின் 42ஆவது படம் சிறுத்தை சிவா வசம் சென்றுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறதாம். ஹரி படத்தையும் இந்த நிறுவனம் தயாரிக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திரா காந்தியான தலைவி!