கரோனா விழிப்புணர்வு தொடர்பாக கவிஞர் வைரமுத்து பாடல் எழுத, அதனை பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடி வெளியிட்டுள்ளார்.
கரோனா நோய் தொற்று தொடர்பாக விழிப்புணர்வு பாடல் ஒன்றை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். இந்தப் பாடலுக்கு ட்யூன் அமைத்துள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அதனை பாடியுள்ளார்.
இதையடுத்து இந்த கரோனா விழிப்புணர்வு பாடலை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார்.
அதில், இந்தத் தமிழப் பாடலை அழகாக எழுதியிருப்பது கவிஞர் வைரமுத்து. பாடலுக்கு நான் இசையமைத்துள்ளேன். உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் பாடலில் இருக்கும் வரிகளின் ஆழத்தையும், அர்த்தத்தையும் புரிந்துகொண்டு அதனை ஆசரிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய கடமை என்று கூறி பாடலைப் பாடியுள்ளார்.
வைரமுத்து எழுதி, பாலசுப்பிரமணியம் பாடியிருக்கும் பாடலின் வரிகள் பின்வருமாறு:
கரோனா கரோனா கரோனா
அனுவை விடவும் சிறியது
அணுகுண்டைப் போல் கொடியது
சத்தம் இல்லாமல் நுழைவது
யுத்தம் இல்லாமல் அழிப்பது
தொடுதல் வேண்டாம்
தனிமைக் கொள்வோம்
தூய்மை என்பதை மதமாய் செய்வோம்
கொஞ்சம் அச்சம், நிறையா அறிவு
இரண்டும் கொள்வோம்
இதையும் வெல்வோம்
எத்தனை போர்கள் மனிதன் கண்டான்
அத்தனை போரிலும் அவனே வென்றான்
கரோனா பயம் கொன்று முடிப்பான்
கொள்ளை நோயை வென்று முடிப்பான்
நாளை மீள்வாய் தாயகமே
நாளைய உலகின் நாயகமே
இதையும் படிங்க: தனிமைப்படுவோம் நம்மை காக்க.. ஒன்றுபடுவோம் நாட்டை காக்க..! - வைரமுத்து