சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபல ’தெருக்குரல்’ பாடகர் அறிவு, பாடகி ‘தீ’ கூட்டணியில் வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் யூ டியூபில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
இந்தப் பாடலை முணுமுணுக்காத உலகத் தமிழர்களே இல்லையெனக் கூறலாம். இந்தப் பாடலில் இடம்பெற்ற ’என்ன குறை, என்ன குறை, என் செல்ல பேராண்டிக்கு என்ன குறை?’ என்ற ஒப்பாரி வரிகளை பாடியவர் பாடகி பாக்கியம்மா.
அந்தப் பாடல் காணொலியில், பாக்கியம்மா நடனமும் ஆடியிருப்பார். ஒப்பாரி பாடல்கள் பாடுவதில் வல்லவரான பாக்கியம்மா இன்று (ஜூலை 3) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
பாக்கியம்மாவின் மறைவிற்கு, பாடகர் அறிவு இரங்கல் தெரிவித்து ட்வீட் வெளியிட்டுள்ளார். அதில், “எத்தனையோ இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமாக போய்விடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி பாடல்களை பாடுவதில் அவருக்கு இணை இல்லை. அவரது மறைவு என்னை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் ஜெய்!