அல்லு அர்ஜுன், பூஜா ஹெக்டே நடிப்பில் ஜனவரி மாதம் 12ஆம் தேதி வெளியான படம் 'அலா வைகுந்தபுரமுலோ'. திரிவிக்ரம் இயக்கியுள்ள இப்படத்தில் தபு, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீதா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அதிலும் குறிப்பாக, 'புட்ட பொம்மா புட்ட பொம்மா' (Butta bomma) என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள்வரை அனைவரும் இப்பாடலை விரும்பியுள்ளனர்.
-
Dance always keeps me up and running❤️#StayHomeStaySafe #WeWillGetThroughThisTogether #slimfitsimran #dancewithme pic.twitter.com/UjHazzALtE
— Simran (@SimranbaggaOffc) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Dance always keeps me up and running❤️#StayHomeStaySafe #WeWillGetThroughThisTogether #slimfitsimran #dancewithme pic.twitter.com/UjHazzALtE
— Simran (@SimranbaggaOffc) May 13, 2020Dance always keeps me up and running❤️#StayHomeStaySafe #WeWillGetThroughThisTogether #slimfitsimran #dancewithme pic.twitter.com/UjHazzALtE
— Simran (@SimranbaggaOffc) May 13, 2020
அதுமட்டுமல்லாது, டிக் டாக்கில் #buttabomma என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, பொதுமக்கள் முதல் பிரபலங்கள்வரை இப்பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர், தனது மனைவியுடன் 'புட்ட பொம்மா புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடினார்.
தற்போது இந்த பாடலுக்கு நடிகை சிம்ரன் நடனமாடியுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். மேலும் நடனம்தான் தன்னை இயக்கிக் கொண்டிருப்பாதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இதயத்தை தொட்ட மாற்றுத்திறனாளிகளின் காதல் டிக்-டாக்! அல்லு அர்ஜுன் ஷேரிங்