ETV Bharat / sitara

முன்னாள் காதலிக்காக ஓய்வில்லாமல் உழைக்கும் சிம்பு! - actor simbu

நடிகை ஹென்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மஹா' படத்தில் நடிகர் சிம்பு இடைவிடாமல் நடித்து வருவது படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மஹா
author img

By

Published : May 28, 2019, 11:12 PM IST

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஜமீல் இயக்கும் புதிய படம் 'மஹா'. நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கோவாவில் எட்டு நாட்களாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் சிம்பு, சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். ஹன்சிகாவுக்கு கணவராக நடிக்கும் சிம்புவின் பகுதிகான காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகிறது. கொஞ்சம் கூட ஒய்வில்லாமல் நடிகர் சிம்பு நடித்து வருவதால், படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் மதியழகன் கூறுகையில், "மஹா படத்திற்காக மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க நடக்க வேண்டும் என்பதால் பரபரப்பாக படப்பிடிப்பு நடக்கிறது. இதனால் நடிகர் சிம்புவுக்கு கேரவன் கூட அமைத்து கொடுக்கவில்லை. படப்பிடிப்பில் சிம்பு ஏதாவது பிரச்னை செய்வாரோ என்ற சந்தேகம் இருந்ததால், நாங்கள் மும்பையில் இருந்து கோவாவிற்கு கேரவனை கொண்டு வர முயற்சி செய்தோம். அதற்கு அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி, இன்னோவா காரின் உள்ளேயே ஓய்வு எடுத்துக் கொண்டார். தாங்க முடியாத வெப்பத்தையும், வியர்வைகளையும் தாண்டி அவர் படப்பிடிப்பிற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறார்" என்றார்.

ஹன்சிகா  படத்திற்காக இடைவிடாமல் நடிக்கும் STR .

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில்  இயக்குனர் ஜமீல் இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானி நடிக்கும் 'மஹா'. தற்போது, இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனும் இணைந்து உள்ளார்.  அவர் நடிக்கும் காட்சிகளை  முழுவீச்சில் , கோவாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது . 

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்  வி.மதியழகன் கூறுகையில்,

நாங்கள் திட்டமிட்ட 8 நாட்கள்  தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடைபெற உள்ளது  இன்று மூன்றாவது நாளாக கோவா படப்பிடிப்பில் இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் 5 வெவ்வேறு இடங்களில் படம் பிடிக்க நடக்க வேண்டும் என்பதால் பரபரப்பாக படப்பிடிப்பு நடக்கிறது. இந்த  படப்பிடிப்பில் STR மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடிக்கும் ஒரு பாடல், சண்டைக் காட்சி, காதல் காட்சிகள், பார்ட்டி, காதல் பிரிவு மற்றும் திரும்ப சேர்தல் போன்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. 

STR உடன் பணிபுரிவது  சந்தோஷமாக உள்ளது. அவருக்கு எங்களால் ஒரு சரியான கேரவன் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லை, STR ஏதாவது பிரச்சினை செய்வாரா என்ற சந்தேகம் இருந்ததால், நாங்கள் மும்பையில் இருந்து கோவாவிற்கு கேரவனை கொண்டு வர முயற்சி செய்தபோது, அவர் அதெல்லாம் வேண்டாம் எனக்கூறி, இன்னோவா காரின் உள்ளேயே ஓய்வு எடுத்துக் கொண்டார். தாங்க முடியாத வெப்பத்தையும், வியர்வைகளையும் தாண்டி அவர் படப்பிடிப்பிற்காக  முழு ஒத்துழைப்பு கொடுத்தார்.

நாங்கள் மதியம் 12 மணியில் இருந்து இரவு 12:30 மணி வரை 12 மணி நேரம் தொடர்ச்சியாக பிடிப்பு நடத்தியபோதிலும் , அடுத்த நாள் எத்தனை மணிக்கு வர வேண்டும் என கேட்டு விட்டு தான் செல்வார். 
இந்த படத்தில் STR ஹன்சிகா மோத்வானி  கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக இருக்கிறது என்றார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.