ETV Bharat / sitara

விஜய் சேதுபதிக்கு குரல் கொடுத்த சிம்பு!

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் முருகா பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார்.

author img

By

Published : Mar 18, 2021, 4:52 PM IST

vijay
vijay

மறைந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதனின் 'பேராண்மை', 'பூலோகம்' ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் தற்போது விஜய் சேதுபதியை வைத்து 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் படத்தை இயக்கிவருகிறார்.

சந்திரா ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக விவேக், விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார். மேலும், மேகா ஆகாஷ், ரித்திவிகா, இயக்குநர்கள் கரு. பழனியப்பன், மோகன் ராஜா, மகிழ் திருமேனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின், கதையில் சர்வதேச பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி இப்படத்தின் கதை உள்ளதாகத் தெரிகிறது. இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார். படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'முருகா' என்ற பாடல் நாளை (மார்ச் 19) வெளியாகவுள்ளது. இந்தப் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்' படத்தில் 'யாரையும் இவ்வளவு அழகா பாக்கல' என்ற பாடலையும் சிம்பு பாடியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கார்த்தியின் 'சுல்தான்' படத்தில் சிம்பு பாடிய பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.