இயக்குநர் சுசீந்திரன் சிம்புவை வைத்து 'ஈஸ்வரன்' என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். இதில் சிம்புவுடன் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
சிம்புவின் 46ஆவது படமான இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் டீசர் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்தப் போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலானது. குறுகிய நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்த ஈஸ்வரன் படக்குழுவினர் தீபாவளி பரிசாக ரசிகர்களுக்கு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.
-
IRAIVANUKU NANDRI 😊🙏🏻#Eeswaran https://t.co/phxiCaJQug#EeswaranDiwali#EeswaranTeaser #SilambarasanTR #Atman #STR
— Silambarasan TR (@SilambarasanTR_) November 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">IRAIVANUKU NANDRI 😊🙏🏻#Eeswaran https://t.co/phxiCaJQug#EeswaranDiwali#EeswaranTeaser #SilambarasanTR #Atman #STR
— Silambarasan TR (@SilambarasanTR_) November 13, 2020IRAIVANUKU NANDRI 😊🙏🏻#Eeswaran https://t.co/phxiCaJQug#EeswaranDiwali#EeswaranTeaser #SilambarasanTR #Atman #STR
— Silambarasan TR (@SilambarasanTR_) November 13, 2020
இன்று (நவம்பர் 14) அதிகாலை 4.32 மணியளவில் வெளியான டீசர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கிராமத்து பின்னணியில், தமிழ்படத்துக்கே உரிய பாணியில் படம் உருவாக்கியிருப்பது டீசரில் தெரியவருகிறது. இந்த திரைப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்துகிறார்.
பெங்கல் வெளியீடாக 'ஈஸ்வரன்' வெளியாக உள்ளதால் படக்குழுவினர் இறுதிகட்ட பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.