தமிழ் சினிமா பிரபலங்கள் சந்திக்கும் சிக்கலான கேள்வி, உங்களுக்கு எப்போ கல்யாணம்? ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால், எப்போது கல்யாணம் எனக் கேட்டு டார்ச்சர் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறது ஒரு கும்பல். இந்தக் கேள்வியால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளானவர் சிம்பு. பல்வேறு சர்ச்சையில் சிக்கி, அதிலிருந்து மீண்டுவந்து மெச்சூரான நடிகராக வளர்ந்திருக்கிறார். சமீபத்தில்தான் அவர் தம்பி குறளரசனின் திருமணம் முடிந்தது. அப்போது அவரது தந்தை டி.ராஜேந்தர், செய்தியாளர்கள் சந்திப்பில் சிம்பு கல்யாணம் எப்போது எனும் கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் கண்ணீர் வடித்தார். தற்போது சிம்புவுக்கு டும்டும்டும் என்ற நல்ல செய்தி வெளியாகியுள்ளது.
சிம்புவுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணமாக உள்ளது. தனது தாயார் உஷா பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்துகொள்ள சிம்பு முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. சிம்புவுக்காக பெண் தேடும் படலத்தில் தீவிரமாக இருக்கிறார் உஷா.
சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்பிறகு ‘முஃப்தி’ எனும் கன்னட ப்ளாக்பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.