சென்னை: நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதன் விழா இன்று வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது, “வேல்ஸ் பல்கலைக்கழகத்துக்கு எனது நன்றி, இந்த விருது எனக்கு கிடைத்ததாக கருதவில்லை, ஏனென்றால் விருது கிடைக்க என் தாய் தந்தையே காரணம். திரைத்துறையில் நடிப்பு, இயக்கம், நடனம் என அனைத்தையும் 9 மாத குழந்தையாக இருந்தது முதல் எனக்கு கற்றுத் தந்தது எனது தாய் தகப்பன்தான்.
இப்படிப்பட்ட அப்பா, அம்மா அடுத்த ஜென்மத்தில் எனக்கு கிடைப்பார்களா எனத் தெரியவில்லை , எனவே இந்த பெற்றோரை எனக்கு தந்த
இறைவனுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
எனக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு, தட்டிக் கொடுத்து அழைத்து வந்தது எனது அம்மா, அப்பாதான் என்றார். சிம்புவிற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
முத்தம் பொலிந்த சிலம்பரசனின் பெற்றோர்
சிலம்பரசன் முனைவர் பட்டம் வாங்கியதும் அவரின் பெற்றோர் டி ராஜேந்தர், ஊஷா ஆகியோர் தங்களது மகனுக்கு முத்தம் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.
பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பனுக்கும் டாக்டர் பட்டம்
இந்த விழாவின் போது நடிகர் சிலம்பரசன், தொழிலதிபர் வி.ஜி.சந்தோஷம், பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிலையில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தயாரிப்பாள்ர் ஐசரி கணேஷன் வெந்து தணிந்தது காடு படத்திற்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டமளிப்பிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:'உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிங்க' - விஜய் ஆண்டனி