நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் ஓசூரில் நிறைவடைந்துள்ளது. இதனைப் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
இந்நிலையில், 'மாநாடு' படத்தில் பணியாற்றிய 300 பேருக்கு நடிகர் சிம்பு விலை உயர்ந்த கைக்கடிகாரத்தைப் பரிசாகக் கொடுத்து மகிழ்ந்துள்ளார்.
சமீப காலமாக நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு படக்குழுவினருக்குத் தங்கக்காசு, கைக்கடிகாரம், விலை உயர்ந்த கார் ஆகியவற்றைப் பரிசாக வழங்கிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'மாநாடு' படப்பிடிப்பு நிறைவு: கேக் வெட்டி கொண்டாடிய சிம்பு