ETV Bharat / sitara

’மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன்’- சிம்பு உருக்கம்! - S. P. Balasubrahmanyam

மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன் என்று பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து நடிகர் சிம்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சிம்பு
சிம்பு
author img

By

Published : Sep 25, 2020, 9:10 PM IST

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சென்னயில் உள்ள பிரபல மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். அவரின் மறைவு குறித்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகர் சிம்பு பாடகர் எஸ்.பி.பி. மறைவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “எத்தனை ஆயிரம்‌ பாடல்கள்‌?? பாடிக்கொண்டே இருக்க முடியுமா ஒரு மனிதனால்‌?? சிட்டாய்‌ பறந்து பறந்து குரலால்‌ உலகம்‌ வளைத்தார்‌. மொழிகள்‌ தாண்டிய சாதனைகளை நிகழ்த்திய குரல்களின்‌ அரசன்‌. சாதாரணமான பாடகர்‌ இல்லை நம்‌ எஸ்‌.பி.பி. இந்த உலகில்‌ துயரமானவர்களை மகிழ்விக்க. காலத்தால்‌ அவதியுற்றோர்களை அரவணைத்துக்‌ கொள்ள. உலகை தினம்‌ மகிழ்விக்க அனுப்பப்பட்ட குரல்‌ மருத்துவர்‌.

என்‌ குடும்பத்திற்கும்‌ அவருக்குமான நிகழ்வுகள்‌ மறக்க இயலாதவை. என்‌ தந்தை கம்போஸ்‌ பண்ண பாடும்‌ நிலா பாட வந்திருந்தார்‌. குட்டிப்‌ பையன்‌ நான்‌ ரெக்கார்டிங்‌ பண்ண அமர்ந்திருந்தேன்‌. மற்றவர்களாக இருந்திருந்தால்‌ பாட மறுத்திருப்பார்கள்‌.

என்னைப்‌ பார்த்து தன்‌ சிரிப்பால்‌ வாழ்த்திவிட்டு எந்த மறுப்பும்‌ இல்லாமல்‌ நம்பிக்கை வைத்துப்‌ பாடினார்‌. இன்று வரை என்னால்‌ மறக்க முடியாத பதிவு அது. அதைப்போல... "காதல்‌ அழிவதில்லை” படம்‌ நான்‌ நாயகனாக நடித்த முதல்‌ படம்‌. பாலு சார்‌ "இவன்தான்‌ நாயகன்‌" என்ற பாடலைப்‌ பாடிக்‌ கொடுத்தார்‌.

முதன்‌ முதலில்‌ "இவன்‌ தான்‌ நாயகன்‌” என எனக்காக உச்சரித்த குரல்‌ இன்றும்‌ என்னை நாயகனாக வைத்துக்‌ கொண்டிருக்கிறது. நன்றி மறவேன்‌ பாலு சார்‌. யாரையும்‌ காயப்படுத்தாத அந்த குணம்‌. தவறிப்‌ புரிந்து கொள்ளப்பட்டூவிட்டால்‌ மன்னிப்பு கோரும்‌ தன்மை, ஒரு குழந்தையைப்‌ போல தன்‌ வாழ்நாள்‌ முழுக்க வாழ்ந்து கடந்தவர்‌. விடைகொடுத்து மீண்டும்‌ உங்களை இந்த மண்ணில்‌ வரவேற்க காத்திருக்கிறேன்‌ பாடு நிலாவே... லவ்யூ”என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இனி இறைவன் சபையில் கலைஞன் நீ...! - நடிகர் மயில்சாமி இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.