ETV Bharat / sitara

நாளை சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் வேற லெவல் சர்ப்ரைஸ்

author img

By

Published : Sep 17, 2021, 11:19 AM IST

நடிகர் சிம்பு நடிக்கவுள்ள 48 ஆவது படத்தின் அப்டேட் நாளை (செப் 18) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு
சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம், 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கிய இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கடந்த மாதம் 4 ஆம் தேதி நிறைவடைந்த இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

அப்படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் சிம்பு நடித்துவருகிறார். இப்படத்திற்குத் தனது எடையை குறைத்து அவர் வெளியிட்ட போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம்.. சிம்புவின் 48ஆவது படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதுகுறித்த அப்டேட் நாளை (செப் 18) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிசையாக சிம்புவின் படங்கள் குறித்த அப்டேட் வெளியாவதால், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஏற்கனவே சிம்வு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தையும் வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.