வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில், டி.ஆர். சிலம்பரசன் என்கிற சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகேயுள்ள பிரபல தீம் பார்க்கில் நடைபெறுகிறது.
அங்கு பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதில், சிலம்பரசனுடன், கல்யாணி பிரியதர்ஷன், அஞ்சனா கீர்த்தி, இருநூறுக்கும் மேற்பட்ட மும்பை, பெங்களூரு நடனக் கலைஞர்கள் பங்கேற்று நடனமாடி வருகின்றனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவான பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கிறார். இந்தப் பாடல் காட்சியோடு, படத்தின் சில முக்கியக்காட்சிகளும் இங்கே படமாக்கப்படவுள்ளன. முழுக்க அரசியல் கதைகளத்துடன் காமெடி, ஆக்ஷன் கலந்து படம் உருவாகிறது.
சிம்பு நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் மாநாடு திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகரன், இயக்குநர் நடிகர் எஸ் ஜே சூர்யா, ஒய் ஜி மகேந்திரன், உதயா, கருணாகரன், பிரேம்ஜி, அரவிந்த ஆகாஷ் என பலர் படத்தில் நடிக்கிறார்கள்.
இதையும் படிங்க: காகித பூக்கள் - ஒட்டன்சத்திரம் பகுதியில் படமாகும் முக்கோண காதல் கதை