'சென்னை 28' இரண்டாவது பாகத்துக்குப் பிறகு வெங்கட் பிரபு 'பார்ட்டி' படத்தை இயக்கினார். சில காரணங்களால் அப்படம் வெளியாகாமல் கிடப்பில் உள்ளது. இதையடுத்து வெங்கட் பிரபு 'மாநாடு' எனும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதில் சிம்பு கதாநாயகானாக ஒப்பந்தமானார்.
சிம்பு மீது படப்பிடிப்புக்கு காலதாமதமாக வருபவர், கொடுத்த கால்ஷீட்டுக்கு ஏற்றபடி நடித்துத் தராதவர் என்ற முத்திரை கோடம்பாக்கம் வட்டாரத்தில் உள்ளது. இதுகுறித்து சில தயாரிப்பாளர்கள் அவர் மீது புகாரும் அளித்துள்ளனர். தற்போது ‘மாநாடு’ படத்துக்கும் வழக்கம்போல வேலையைக் காட்டியிருக்கிறார் சிம்பு. இதனால் அவரை படத்தை விட்டு நீக்குவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
![சிம்பு நீக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/simbhu-maanadu-movie-dropped_0808newsroom_1565242768_78.jpg)
சிம்பு 'மாநாடு' படத்தில் இருந்து நீக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், 'மாநாடு' படம் அதே இயக்குநருடன் புதிய பரிமாணத்தோடு தொடங்கவிருப்பதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.