ETV Bharat / sitara

பதின் பருவத்தினரின் வாழ்வியலே 'மின்மினி' - 'சில்லுக் கருப்பட்டி' ஹலிதா ஷமீம்

author img

By

Published : May 30, 2020, 10:27 AM IST

Updated : May 30, 2020, 1:06 PM IST

சென்னை: "சில்லுக் கருப்பட்டி" படத்தை இயக்கிய ஹலீதா, தற்போது 'மின்மினி' படத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

Halitha Shameem
Halitha Shameem

தமிழில் 2014ஆம் ஆண்டு வெளியான 'பூவரசம் பீப்பி' என்ற திரைப்படத்தை இயக்கியவர் பெண் இயக்குநர் ஹலிதா ஷமீம். இவர் சமீபத்தில் சமுத்திரக்கனி, சுனைனா, சாரா அர்ஜூன் உள்ளிட்டவர்களை வைத்து 'சில்லுக் கருப்பட்டி' என்னும் திரைப்படத்தை இயக்கினார்.

டிவைன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெங்கடேஷ் வேலினி தயாரித்த இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டது. இப்படம் நகர பின்னணி கொண்ட நான்கு குறுங்கதைகளைக் கூறும் அந்தாலஜி வகை திரைப்படமாகும். இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இதனையடுத்து ஹலீதா 'மின்மினி' படத்தின் தயாரிப்பு பணிகளில் இறங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "தப்பிப் பிழைத்தவரின் குற்றம் என்பது எந்த அளவுக்கு உண்மை. நீங்கள் நேசிப்பவரின் கனவுகளை நனவாக்க எந்த அளவுக்கு துணை நிற்கின்றீர்கள்? அன்பு செலுத்துவதற்கும் வெறுப்பற்கும் மத்தியில் உள்ள மெலிதான கோடு என்ன? பெரியவர்களைவிட இளம் வயதினர் ஏன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருக்கிறார்கள்? என்று என்னுள் இறங்கிய கேள்விகளுக்கு விடை காண நான் செய்யும் முயற்சியே 'மின்மினி'.

இளம் பருவத்தினர், தப்பு செய்தும் சிக்காதவரின் குற்றவுணர்வு, அன்பு மற்றும் வெறுப்பு இவற்றுக்கிடையே உள்ள மெலிதான வேறுபாடு, இளம் பருவத்தினரின் உணர்ச்சிகள் குறித்தெல்லாம் நிறைய கேள்விகள் எழுந்தாலும், இவற்றையெல்லாம் எளிமையாகவும் மென்மையாகவும் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

Halitha Shameem
படப்பிடிப்பில் ஹலிதா ஷமீம்

பதின் பருவத்தினரின் உலகில் நுழைந்து அவர்களின் உணர்ச்சிகரமான வாழ்வியலை படத்தில் பதித்தது எனக்கு இனிய அனுபவமாக அமைந்தது. உணர்ச்சிகளால் ஆளப்படும் இளம் பருவத்தினரின் இந்தப் பகுதியை மற்றவர்கள் புரிந்து கொள்வது சற்றே கடினமானது.

வெற்றியைக் கொண்டாடுவது, காதலை வெளிப்படுத்துவது, தோல்வியை எதிர்கொள்வது என்று எந்த விதமான உணர்ச்சிகளையும் ஒரு விதமான அதீத தன்மையுடன் வெளிப்படுத்துபவர்களாக இருக்கின்றனர். இது ஏன் என்ற கேள்வியே, பதின் பருவத்தினரைப் பிரதானப்படுத்தி ஒரு கதை எழுத எனக்குத் தூண்டுகோலாக அமைந்தது. படத்தைப் பற்றி மேலும் நான் விளக்குவதைவிட ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து ரசிப்பதுதான் சிறப்பாக இருக்கும்.

2014ஆம் ஆண்டு எனது முதல் படமான 'பூவரசம் பீப்பீ 'வெளிவந்ததுமே 'மின்மினி' படத்தைத் தொடங்கி விட்டேன். மின் மினி படத்தில் சிறுவர்களாக இருந்த சிலர் வளர்ந்த பிறகு நடப்பதை காட்சிப்படுத்த வேண்டியிருந்தது. எனவே படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டு காத்திருந்தேன்.

இப்போது அவர்கள் நான் எதிர்பார்த்த அளவு வளர்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறேன். 'மின்மினி' படத்தில் குழந்தை நட்சத்திரங்கள் கெளரவ் கலை, ப்ரவீண் கிஷோர், 'த்ரிஷ்யம்' 'பாபநாசம்' படங்களில் நடித்த எஸ்தர் அனில் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிப்பதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: சில்லுக்கருப்பட்டி படக்குழுவினருக்கு 'சர்ப்ரைஸ்' செய்த சூர்யா!

Last Updated : May 30, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.