இயக்குநர் கே.வி. ஆனந்த் உடலநலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், இன்று (ஏப்ரல் 30) அதிகாலை நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் சிம்பு கே.வி. ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " தொடர்சியான மரணங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. மரணம் எதிர்பாராத ஒன்றுதான் என்றாலும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பவர்களை நம்மோடு தினமும் தொடர்பில் இருப்பவர்களை எதிர்பாராமல் இழப்பது அதிர்ச்சியளிக்கிறது.
-
#RIPkvanandsir 💔 pic.twitter.com/siWJllzlHb
— Silambarasan TR (@SilambarasanTR_) April 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#RIPkvanandsir 💔 pic.twitter.com/siWJllzlHb
— Silambarasan TR (@SilambarasanTR_) April 30, 2021#RIPkvanandsir 💔 pic.twitter.com/siWJllzlHb
— Silambarasan TR (@SilambarasanTR_) April 30, 2021
அதிர்ந்து பேசாத நல்ல மனிதர் கே.வி. ஆனந்த். 'கோ' படத்தில் நான் நடித்திருக்கவேண்டியது. அப்போதிருந்த சூழலில் தவிர்க்கும்படியாகிவிட்டது. சமீபத்தில் மிக அருமையான கதை ஒன்றை எனக்குச் சொல்லியிருந்தார். சேர்ந்து படம் பண்ணலாம் எனச் சொல்லியிருந்தேன். தினமும் என்னோடு தொடர்பிலிருந்தார். நேற்றுவரை பேசிக்கொண்டிருந்தவர் இன்று அதிகலை மரணமடைந்துவிட்டார் என்று சொல்வதை மனம் நம்பமறுக்கிறது. பொய்ச் செய்தியாக இருக்கக்கூடாதா என அங்கலாய்க்கிறேன்.
இவ்வளவு சீக்கிரம் அவரை இழந்திருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. ஒளிப்பதிவாளர்கள் இயக்குநராகி வெற்றி பெற்றவர்களில் கே.வி. ஆனந்த் மிக முக்கியமானவர். நிச்சயம் பேசப்படும் நிறையப் படங்களை அவர் தொடர்ந்து தந்திருப்பார். அவசரமாகப் பயணித்துவிட்டார் இறைவனிடம். திரைத்துறைக்கு அவரின் மறைவு பேரிழப்பு. அவரை இழந்து நிற்கும் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடவுளின் கரங்களில் இளைப்பாறட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.