ETV Bharat / sitara

தோகாவில் கோலாகலமாக நடக்கும் 'சைமா' விருது விழா! - kathar

தென்னிந்திய திரைப்பட விருதுகளை வழங்கும் 8ஆவது 'சைமா' தோகாவில் கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.

siima
author img

By

Published : Aug 7, 2019, 2:44 PM IST

Updated : Aug 17, 2019, 7:59 AM IST

சைமா தென்னிந்திய சினிமாவை உலகளாவிய தரத்திற்கு கொண்டுசென்று தென்னிந்திய நடிகர்களுக்கு சர்வதேச தளத்தை ஏற்படுத்தித் தருகிறது. இந்நிலையில், பான்டலூன்ஸ் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா முதன்முறையாக கத்தாரில் நடைபெறவிருக்கிறது.

இதில் இந்திய சினிமாவைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். ஆகஸ்ட் 15, 16ஆம் தேதி சைமா விழா நடைபெறவுள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஆண்ட்ரியா
செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஆண்ட்ரியா

பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட பலரும் கவுரவ விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்ச்சி தோகாவிலுள்ள லுசெயில் அரங்கில் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி தெலுங்கு, கன்னடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

திரைப்பட விருதுகள் தவிர, தென்னிந்திய வர்த்தக சாதனையாளர்களை பாராட்டும் வணிக விருது விழா ஆகஸ்ட் 14ஆம் தேதி தோகாவில் நடைபெறும்.

சைமா விருது தொடக்க விழா
சைமா விருது தொடக்க விழா

இந்த விழாவில், '96', 'கோலமாவு கோகிலா', 'வடசென்னை', 'பரியேறும் பெருமாள்' ஆகிய படங்கள் பரிந்துரையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Intro:தோஹாவில் நடைபெறும் SIIMA விருதுகள் வழங்கும் விழாBody:8 வது ஆண்டாக நடைபெறும் SIIMA விருதுகள் அதிகம் பார்க்கப்படும் விருது நிகழ்ச்சியாகும், தென்னிந்திய சினிமாவை உலகளாவிய எல்லைகளில் கொண்டு சென்று தென்னிந்திய நடிகர்களுக்கு சர்வதேச ரசிகர்களை ஏற்படுத்தித்தரும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.

பாண்டலூன்ஸ் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா முதன்முறையாக கத்தாரில் நடைபெறவுள்ளது, இதில் இந்திய சினிமாவைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். ஆகஸ்ட் 15 மற்றும் 16 அன்று இந்த விழா நடைபெறவுள்ளது. பிரபல நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு கௌரவ விருந்தினர்களாக கலந்துகொள்கிறார்கள். ஒன் எஃப்எம் 89.6 இல் தோஹாவில் இயங்கும் இந்நிகழ்ச்சி லுசெயில் உள்ளரங்க அரங்கில் நடைபெறவிருக்கிறது.

4 மொழி திரைபிரபலன்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சி இரண்டு நாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15 தெலுங்கு மற்றும் கன்னடம் மற்றும் ஆகஸ்ட் 16 தமிழ் மற்றும் மலையாளம் நடைபெற உள்ளது.

Conclusion:திரைப்பட விருதுகள் தவிர, தென்னிந்திய வர்த்தக சாதனையாளர்களை பாராட்டும் வணிக விருது ஆகஸ்ட் 14 ஆம் தேதி சொகுசு மாண்ட்ரியன் தோஹாவில் நடைபெறும். பிரபலங்கள் மற்றும் உயர் தொழில் வல்லுநர்களால் விருதுகள் வழங்கப்படும்.

Last Updated : Aug 17, 2019, 7:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.