ETV Bharat / sitara

சினிமாவை நம்பினார் கைவிடப்படார் - இயக்குநர் பாண்டியராஜ்

நாம் வெற்றி பெற்று விட்டால் வீண் முயற்சி என்று கூறியவர்கள் விடாமுயற்சி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு நாம் வெற்றி பெற வேண்டும்.

pandiyaraj
pandiyaraj
author img

By

Published : Mar 19, 2020, 8:19 AM IST

சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப்படார் என்று இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜ் கூறியுள்ளார்.

குறும்பட இயக்குநர்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய படைப்பாளிகளை வரவேற்கும் விதத்தில் 'சீகர் தேசிய குறும்பட விழா 2020' விழா சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் நடைபெற்றது.

(SIEGER
சீகர் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினர்கள்

தேசிய அளவில் நடந்த இந்தப் போட்டியில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, பெங்காலி போன்ற இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து ஏராளமான குறும்படங்கள் கலந்து கொண்டன. இதில் 'நண்டூறுது' என்கிற தமிழ்க் குறும்படம் முதல் பரிசு பெற்றது. 'டிக்கெட்' என்கிற இந்திக் குறும்படம் இரண்டாம் பரிசையும், 'டெத் ஆஃபர்ஸ் லைஃப்' என்கிற மலையாளக் குறும்படம் மூன்றாம் பரிசையும் பெற்றன.

விழாவில் சீகர் நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார் பேசும்போது, "சீகர் (SIEGER) என்றால் ஜெர்மனி மொழியில் வின்னர் என்று பொருள். நாங்கள் முதன் முதலில் இதை ஒரு பயிற்சி நிறுவனமாகத்தான் தொடங்கினோம். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களில் பயிற்சி கொடுத்தோம். இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளிலும் நேர்காணலிலும் நம்பிக்கையாக எப்படி எதிர் கொள்வது என்பது பற்றிய பயிற்சிகள் கொடுத்தோம்.

மாணவர்கள், வேலை பார்ப்பவர்களுக்கு விளையாட்டு அடிப்படையிலான திறனை வளர்த்துக் கொள்வது எப்படி என்று பயிற்சிகள் கொடுத்தோம். அது பெரிய அளவில் வெற்றி பெற்றது. நிறைய கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு தந்து ஊக்கப்படுத்தின. புதிய படைப்பாளிகளை வரவேற்க வேண்டும் என்று திரைப்பட விழாவுக்கான குறும்படப் போட்டிகளை நடத்தினோம்.

(SIEGER
குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சிக்குள் செல்லும் ராஜ்குமார்

இப்போது அதை தேசிய அளவில் நடத்தி இருக்கிறோம். வரவுகள் ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது, போகப் போக அதிகளவில் வர ஆரம்பித்தன. இங்கே 15 வகைப்பாடுகளில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்குகிறோம். முதல் மூன்று குறும்படங்களுக்கு ரொக்கப் பரிசுகளும் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்குகிறோம் என்றார்.

இவரை தொடர்ந்து இயக்குநர் - நடிகர் பாண்டியராஜன் பேசுகையில், என்னை சிலர் சாதாரண நடிகன் காமெடியன் என்று நினைக்கிறார்கள். நான் சீரியசான டாக்குமென்ட்ரிகளைக் கூட எடுத்திருக்கிறேன்.

ஒரு நாள் அப்படி ஒரு டாக்குமெண்ட்ரி எடுப்பதாக திட்டமிட்டு புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் ஒரு புரொடக்ஷன் மேனேஜர் வந்து ஒரு பட வாய்ப்பு தருவதாகக் கூறினார். நான் டாக்குமென்ட்ரி எடுக்கும் திட்டத்தை பெற்றோரிடம் கூறி அந்தப் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டேன். டாக்குமென்டரி படத்தை எடுத்து விட்டு வந்து வேண்டுமானால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.

(SIEGER
சீகர் குறும்படவிழா

கையில் பணம் கொண்டு வந்திருக்கிறேன். முதலில் பணத்தை வாங்கிக்கொண்டு நடிப்பதை விட்டு விட்டு ஏன் உங்களுக்கு இந்த வீண் முயற்சி? என்று கேலியாகப் பேசினார். நான் பிடிவாதமாக முடியாது என்று சொல்லி விட்டேன். அந்த டாக்குமெண்டரி படத்தை எடுத்தேன். அந்தப் படத்துக்கு அமெரிக்காவில் இரண்டாவது பரிசு கிடைத்தது. சர்வதேச படவிழாவில் எனக்கு அப்படி இரண்டாவது பரிசு கிடைத்தது.

அதைக் கேள்விப்பட்டு எல்லா டிவி சேனல்களும் என் வீட்டுக்கு வந்து என்னை பேட்டி எடுத்தார்கள். மீண்டும் அப்போது அந்த தயாரிப்பு நிர்வாகி வந்தார். என்ன வீட்டில் கூட்டம் என்று என் உதவியாளரிடம் கேட்டபோது அவர் விஷயத்தை கூறியிக்கிறார். நாம் வெற்றி பெற்று விட்டால் வீண் முயற்சி என்று கூறியவர்கள் விடாமுயற்சி என்று கூறுவார்கள். அந்த அளவிற்கு நாம் வெற்றி பெற வேண்டும்.

(SIEGER
இயக்குநர் பாண்டியாராஜ்

நான் பெரிதாகப் படிக்கவில்லை. சினிமாவுக்கு வந்தபோது எஸ்.எஸ்.எல்.சி வரை மட்டும் தான் படித்திருந்தேன். ஆனாலும் இயக்குநர் ஆகி விட்டேன். ஆனால் எனக்கு படிப்பில் ஆர்வம் இருந்தது. அப்பா மேலே படிக்க வைக்க முடியாத அளவுக்கு குடும்ப சூழல் இருந்தது. இருந்தாலும் நான் விடவில்லை, 2004 இல் அஞ்சல் வழியில் நான் எம்.ஏ. படித்தேன். 2007இல் எம்.பில் படித்தேன். அதற்குப் பிறகு பி.எச்.டி முடித்து விட்டேன். பி.எச்.டிக்கு நான் எடுத்துக்கொண்ட தலைப்பு 'தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாயப் பங்களிப்பு'. சினிமா ஒரு நல்ல தொழில். சினிமா ஒரு அற்புதமான தொழில். சினிமாவை நம்பியவர்களை அது கைவிடாது. சினிமாவை நம்பினார் கைவிடப்படார் என்றார்.

குறும்படங்கள் தற்போது சினிமாவில் நுழைவதற்கு ஒரு நல்லவழி. முன்பு லட்சங்களில் புழங்கிய சினிமா இப்போது கோடிகளில் புழங்க ஆரம்பித்துவிட்டது. நீங்கள் எடுக்கும் குறும்படம் நன்றாக இருந்தால் நிச்சயம் தயாரிப்பாளர்களிடம் காட்டி வாய்ப்பு பெறலாம்.

'ஆண்பாவம்' என்ற படத்திற்கு பின் என் வாழ்க்கை மாறியது. படம் எடுத்தேன். வீடு வாங்கினேன். கார் வாங்கினேன். திருமணமானது. எனவே உழைத்தால் வெற்றி நிச்சயம். கஷ்டப்பட்டவர்களெல்லாம் வெற்றி பெறுவதில்லை. ஆனால் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கஷ்டப்பட்டவர்கள்தான் என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.