'முன்தினம் பார்த்தேனே', 'தடையறத் தாக்க', 'மீகாமன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அருண் விஜயை வைத்து இயக்கிய படம் தடம். அருண் விஜய் இரட்டை கதாபாத்திரங்களில் நடித்திருந்த இப்படம் கோலிவுட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தமிழைத் தொடர்ந்து தடம் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக்காகிவருகிறது. 'ரெட்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ராம் பொத்தினேனி நடிக்கிறார். கிஷோர் திருமலா இப்படத்தை இயக்கிவருகிறார். இதில் நிவேதா தாமஸ், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது இப்படத்தை இயக்குநர் வரதன் கேத்கர் இயக்கத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்கின்றனர். மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற கதாபாத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிங்க: விஷ்ணுவர்தன் இயக்கும் 'ஷெர்ஷா' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு