'மச்சி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுபா பூஞ்சா. சுட்ட பழம், திருடிய இதயத்தை உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், கன்னட மொழியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் சுமன் பில்லவா என்பவரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் சுமந்த் பில்லவாவை திருமணம் செய்துகொள்ளவிருக்கும் செய்தியை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். லாக்டவுன் முடிந்த பிறகு டிசம்பர் மாதத்தில் எங்களது திருமணம் நடைபெற உள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:த்ரிஷாவின் திடீர் முடிவு - சோகத்தில் ரசிகர்கள்!