ETV Bharat / sitara

சிறந்த தருணத்தில் உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி - தந்தை கமலுக்கு ஸ்ருதி வாழ்த்து! - கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட்டம்

சினிமாவில் 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள  இந்தப் பிறந்தநாள் சிறப்பானது மட்டுமில்லாமல், இந்தத் தருணத்தில் உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி என்று நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசனுக்கு புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தை கமல்ஹாசனுடன் நடிகை ஸ்ருதிஹாசன்
author img

By

Published : Nov 7, 2019, 3:32 PM IST

சென்னை: தந்தையின் பிறந்தநாளுக்கு அழகான புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

உலகநாயகன் கமல்ஹாசன் தனது 65ஆவது பிறந்தநாளை தனது சொந்த ஊரான பரமக்குடியில் கொண்டாடி வருகிறார். நடிகராகவும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் திகழும் கமல்ஹாசன், அங்கு தனது தந்தையார் சீனிவாசனின் சிலையை இன்று காலை திறந்து வைத்தார்.

இதன்பின்னர் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். இதனிடையே சமூக வலைதளங்களில் பல்வேறு விதங்களில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராமில் அவருக்கு அன்பு பொங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், பாபுஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து. சினிமாவில் 60ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இந்தப் பிறந்தநாள் சிறப்பானதாக அமைந்துள்ளது. சொந்த ஊரான பரமகுடிக்குச் சென்று, உங்களது வாழ்க்கையின் இந்தச் சிறப்பான தருணத்தில் பங்கேற்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தையும், கலை உலகில் அடியெடுத்து வைத்து 60 ஆண்டுகள் ஆனதையும் சேர்ந்து மூன்று நாட்களாக கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

சிறந்த தருணத்தில் உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி - அப்பா கமலுக்கு ஸ்ருதி வாழ்த்து!

சினிமாவில் 60வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள  இந்த பிறந்தநாள் சிறப்பானது மட்டுமில்லாமல் இந்த தருணத்தில் உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி என்று நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசனுக்கு புகைப்படத்துடன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.