பாலிவுட்டில் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியான 'பிங்க்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படம் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார்.
''ஒரு பெண் நோ என்று சொன்னால் அதற்கு அர்த்தம் நோ'' என்று அஜித் பேசிய வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழை தொடர்ந்து தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்க, ஸ்ரீராம் வேணு இயக்குகிறார். மேலும் இதில் நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் ஹீரோயினாக யார் நடிப்பார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
இந்நிலையில் இதில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் தமிழ் பதிப்பில் வித்யா பாலன் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதே போல் ஸ்ருதி ஹாசனின் நடிப்பும் பேசப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: தெலுங்கு 'பிங்க்' ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிப்பு