பாடகி ஸ்ரேயா கோஷல் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். சில நாள்களுக்கு முன் அவருக்கு குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், "தேவ்யான் வீட்டில் அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்த வேளையில், நான் உடனடியாக வெளியே வந்து எனது முதல் டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டேன்.
புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்களுக்கும் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. நீங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பவராக இருந்தால், நீங்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 'தயவு செய்து திரும்பி வா சுஷாந்த்' - உணர்சிவசப்பட்ட ரியா சக்ரவர்த்தி