ETV Bharat / sitara

மிரட்டும் கரோனா - 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து!

கரோனா வைரஸ் காரணமாக வரும் 19ஆம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிரட்டும் கரோனா- 19ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து!

author img

By

Published : Mar 16, 2020, 7:40 PM IST

Updated : Mar 17, 2020, 10:29 AM IST

உலகம் முழுவதும் பரவிவரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. மேலும் கூட்டமான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுதலை தடுக்க திரைத்துரையில் பல்வேறு விதமான நடவடிகைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, “திரைப்படங்களில் ஏற்படுத்தப்படும் கற்பனை வில்லன் போல கரோனா வைரஸ் நிஜத்திலும் வந்துவிட்டது. பாதுகாப்பு வசதி உள்ள அமெரிக்காவைத் தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. மற்றவர்களோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் இதன் தாக்கம் மிகவும் குறைவு என்றாலும் மிகப்பெரிய உயிர் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படத்துறையில் பாதுகாப்பு, சுகாதார வசதிகள் இல்லை. திரைப்படத் தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றினால் நோய் தொற்றும் நிலை ஏற்படும். அதனால், வரும் 19ஆம் முதல் சினிமா, சின்னத்திரை தொடர்பான படப்பிடிப்புகள் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இதைத் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் முடிவெடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால், திரைப்படத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் ஊதிய இழப்பு ஏற்படும். வேலை நிறுத்ததால் தொழிலாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், அதைவிட அவர்களின் உயிர்தான் முக்கியம்.

மேலும் இந்த அறிவிப்பை மீறி ரகசியமாக படப்பிடிப்பு நடத்தினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'மற்றவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தாதீர்கள்' - கொரோனா குறித்து கரீனா கபூர் ட்வீட்

Last Updated : Mar 17, 2020, 10:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.