தமிழ் சினிமாவில் ‘துள்ளுவதோ இளமை’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷெரீன். இதனையடுத்து அவர் நடித்த ’விசில்’ படம் மூலம் ரசிகர்கள் மனத்தில் இடம் பிடித்துவிட்டார். இதனையடுத்து திரைத் துறையிலிருந்து விலகியிருந்த ஷெரீன், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கம்பேக் கொடுத்தார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷெரீன், கரோனா தொற்றிலிருந்து நம்மை எப்படிக் காத்துக்கொள்வது என்பது குறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சர்ஜிக்கல் முகக்கவசம் அணிந்து மெழுகுவர்த்தியை ஊதுகிறார். அப்போது ஒரேமுறையில் அணைந்துவிடுகிறது. இதனையடுத்து இரண்டு முகக்கசவம் அணிந்து மெழுகுவர்த்தியை ஊதியபோது, பலமுறை முயன்ற பிறகே அணைக்க முடிந்தது. தொடர்ந்து துணி முகக்கவசம் அணிந்து மெழுகுவர்த்தியை ஊதியபோது அது அணையவில்லை.
ஆதலால் அனைவரும் இதனைப் பயன்படுத்தி, கரோனாவை விரட்டி அடிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த வித்தியாசமான விழிப்புணர்வுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ’போடு ரகிட... ரகிட... ரகிட...’ - பாடல்கள் பட்டியலை வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்!