ETV Bharat / sitara

ஆத்தா நான் நீச்சல் அடிக்க கத்துக்கிட்டேன்... அனுபம் கேர் வெளியிட்ட நீச்சல் வீடியோ!

author img

By

Published : Oct 10, 2019, 9:57 PM IST

நீச்சல் தெரியாததால் ஒரு படத்திலிருந்து விலக்கப்பட்ட அனுபம் கேர், தற்போது ஒரு வழியாக நீச்சல் வகுப்பு சென்று, தான் பயிற்சிபெறும் அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்..

anupam kher

நடிகர் அனுபம் கேர் ஆரம்பகாலத்தில் நீச்சல் தெரியாததால் ஒரு படத்திலிருந்து விலக்கப்படிருக்கிறார். அதற்காக நீச்சல் வகுப்புக்கு சென்று தற்போது அவர் பயிற்சி பெற்ற வீடியோவை பதிவிட்டுள்ளார்.

1982ஆம் ஆண்டு வெளியான 'ஆகாமன்' என்ற படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் அனுபம் கேர். இவர் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'விஐபி', 'லிட்டில் ஜான்', 'குற்றப்பத்திரிக்கை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

  • Don’t get an instructor .. just jump into the deep and, and then watch as your arms and legs move simultaneously! https://t.co/S0ROpm7R3j

    — Shekhar Kapur (@shekharkapur) October 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

சிறந்த நடிகராக திகழ்ந்த அனுபம் கேரால் நீச்சல் கற்க முடியவில்லை. சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில், ஆரம்பகாலத்தில் நீச்சல் தெரியும் என்று கூறி படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டேன். பின்னர், அது பொய்யென்று அறிந்தபின் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் என தெரிவித்திருந்தார். இது அவருக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்திருக்கும் போலும், 35 ஆண்டுகள் கழித்து தற்போது நீச்சல் கற்றுக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் அனுபம் கேர்.

இந்நிலையில் அனுபம் கேர் தனது ட்விட்டர் பக்கத்தில், நீச்சல் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில், பல முயற்சிக்கு பின் தற்போது நான் நீரில் கை கால்களை சீராக நகர்த்தி நீச்சல் கற்றுக்கொண்டுவருகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மக்களே? என்று குறிப்பிட்டுள்ளார்.

அனுபம் கேரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வரும் நிலையில் பாலிவுட் இயக்குநர் சேகர் கபூர், பயிற்சியாளரை வைத்துக்கொள்ளாமல், நீரில் ஆழமாக குதித்துப் பார்த்தால், கை கால்கள் அதுவாகவே நகரும் என கலாய்த்துள்ளார்.

இதையும் வாசிங்க: காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு சொல்லிய நடிகர் அனுபம் கேர்!

Intro:Body:

https://twitter.com/shekharkapur/status/1181970390018428931

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.