ETV Bharat / sitara

'உத்தரவிடுங்கள் நான் செய்கிறேன்' - டெல்லி காப்பாளர் கெஜ்ரிவாலுக்கு ட்வீட் செய்த கிங் கான் - ஷாருக்கான்

இனிவரும் நாள்கள் மிகவும் முக்கியமானது, எனவே பொதுமக்கள் சமூகத் தொடர்பை முடிந்தவரை குறைத்துக்கொண்டு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சமீபத்தில் வீடியோ வெளியிட்ட ஷாருக்கான் தற்போது டெல்லி அரசுக்கு உதவியுள்ளார்.

கிங் கான்
கிங் கான்
author img

By

Published : Apr 4, 2020, 8:46 PM IST

நீங்கள் டெல்லியின் காப்பாளர். எனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன தேவை என்பதை உத்தரவாக போடுங்கள், அதை செய்ய நான் தயாராக உள்ளேன் என ஷாருக்கானின் ட்வீட், சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

இந்தியா முழுவதும் கரோனா தொற்று மிகவேகமாக பரவிவருகிறது. கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பிரபலங்களும், பொதுமக்களும் நிதியுதவி வழங்குகள் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கிணங்க, திரைப்பிரபலங்கள் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிதியுதவி வழங்கிவருகின்றனர்.

இதைத் தொடர்ந்து பாலிவுட் கிங் கான் ஆன ஷாருக்கான், சமீபத்தில் டெல்லி அரசுக்கு உதவிப் புரிந்தார். இவரின் இந்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "கரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில் உங்களுடைய உதவிக்கு எனது மனமார்ந்த நன்றி" என்று ட்வீட் செய்திருந்தார்.

இவரின் இந்த ட்வீட்க்கு ஷாருக்கான் பதிலளித்துள்ளார். அதில், "நீங்கள் டெல்லியின் காப்பாளர். எனக்கு நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. என்ன தேவை என்பதை உத்தரவாகப் போடுங்கள். அதை செய்ய நான் தயாராக உள்ளேன். அனைவரும் ஒன்று சேர்ந்து கரோனாவிடம் இருந்து நாட்டை பேணிப் பாதுகாப்போம் என்று கூறியுள்ளார். இவரின் இந்த ட்வீட் தற்போது ஷாருக்கானின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ’காலராவ துரத்திட்டோம், மலேரியாவ விரட்டிட்டோம், கரோனாவை அழிப்போம்’ - எஸ்.பி.பி விழிப்புணர்வு பாடல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.