இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார். இதற்கிடையில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க, எம்.எஸ். ஸ்ரீபதி இப்படத்தை இயக்குகிறார். ’800’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று(அக்.13) சென்னை சூப்பர் கிங்ஸ்- ஹைதராபாத் அணி நடைபெற்ற ஜபிஎல் போட்டி இடையே வெளியிடப்பட்டது.
அதில், முத்தையா முரளிதரனின் சிறு வயது முதல் அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தது வரை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் ’800’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே பலரும் #ShameOnVijaySethupathi என்ற ஹேஷ் டாக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
தமிழ் மக்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதால், தமிழர்களின் மனதை புண்படுத்திவிட்டதாக பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மால்தீவ்ஸில் நண்பருடன் விடுமுறையை கழிக்கும் டாப்ஸி!